இந்தியாவில் போகோ F2 எந்த விலைக்கு அறிமுகம் ஆகும் ? எப்படி அறிமுகமாகும் ?

Poco F2 Price in India : Redmi K30 Pro will not come to India as Poco F2

போகோ F2 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது.  இந்த மொபைல் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ F2 பெயரில் அறிமுகம் செய்யப்படும்  என தகவல்கள் தற்போது வருகிறது.

இதற்கு தற்போது போகோ நிறுவனத்தின் பொது மேலாளர் சி மன்மோகன் பதிலளித்துள்ளார் அவர் கூறுகையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 ப்ரோ போக்கோ F2 ஸ்மார்ட்போனாக இந்தியாவில் வெளியாகாது.

தற்போது போக்கோ F2  உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்த மொபைல் போனின் விலை  20 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படாது என கூறியுள்ளார்.