ஸ்மார்ட்போன் விற்பனை வீழ்ச்சி !

COVID-19 Coronavirus Impact : Global Smartphone Market affected

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்மார்ட்போன் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பு சீனாவில் ஜனவரி மாதம் ஆரம்பித்து விட்டது .

அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஸ்மார்ட்போன் விற்பனை 14% சதவீத வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது.


இந்தியாவில் தற்போது 21 நாட்கள் இந்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் மொபைல் போன் விற்பனை இந்தியாவிலும் கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி வரும் காலங்களில் தொடருமா இல்லை இந்த வீழ்ச்சியிலிருந்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்  மீண்டும் வருமா என்பது வரும் காலங்களில் தெரியும்.