Redmi k20 Pro 6GB 128GB Price Cut In India
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது Redmi K20 Pro ஸ்மார்ட் போனுக்கு விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்த விலைகுறைப்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரிணய்ட்ற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டது, பின்பு கடந்த மாதம் இந்த மொபைலின் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ. 22,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.