Redmi 9A is launching on September 2
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றார்கள். தற்போது Redmi 9A என்கின்ற ஒரு மொபைலை பட்ஜெட் விலையில் வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே ரெட்மி நிறுவனம் தனது 9 சீரிஸில் Redmi Note 9 Pro Max, Redmi Note 9 Pro, Redmi Note 9, Redmi 9 Prime & Redmi 9 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளார்கள்.
Redmi 9A ஸ்மார்ட்போன் இந்தியாவில் 8,000 ரூபாய்க்கு கீழ் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Redmi 9A வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருப்பதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது..
Redmi 9A ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
Camera | Single rear camera front camera |
Processor | MediaTek Helio G25 |
RAM /storage | 3 GB RAM and 32 GB of internal storage |
Operating system | Android 10 |
Battery | 5,000mAh battery with 10W fast charging support. |