ரெட்மி நிறுவனத்தின் Redmi 9 Power மொபைல் இந்தியாவில் வெளியாகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நிறுவனத்தின் Redmi 9 Power மொபைல் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என்ற தகவல் ஏற்கனவே சில நாட்களாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் ரெட்மி நிறுவனமும் அதற்கான Teaser வீடியோவை வெளியீட்டு இந்த ஸ்மார்ட்போன் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தார்கள்.
இந்நிலையில் ரெட்மி 9 பவர் மொபைல் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஒரு லீக்ஸ் அடிப்படையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 4 ஜி மாடலை ரெட்மி 9 பவர் என்கிற பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகம் ரெட்மி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
👀 This is bound to make you go ballistic! 🚀
— Redmi India (@RedmiIndia) December 10, 2020
⚡ Our first ever #power Smartphone – the #Redmi9Power is launching on 17th December, 2️⃣0️⃣2️⃣0️⃣ at 12 noon!
👉 Set a reminder for the #PowerPacked launch event here: https://t.co/nfrsMh59Sn pic.twitter.com/fPRaSHnXsF