ரியல்மி நிறுவனத்தின் புதிய Q-Series ஸ்மார்ட்போன்கள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Realme’s Q-Series ஸ்மார்ட் போன்கள் அக்டோபர் 16ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரியல்மி யுஐ 2.0- இல் அறிமுகமாகும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது.
இதை பற்றின எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரைக்கும் நிறுவனம் தரப்பில் வெளியிடவில்லை. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு ரியல்மி கியூ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, பின் அது ரியல்மி 5 ப்ரோ என ரி-பிராண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரியல்மி நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கும் மொபைல் போன்களின் “Back Panel” டிசைனை வெளியிட்டு இதில் எந்த டிசைன் உங்களுக்கு பிடித்து இருக்கின்றது என்ற கேள்வியை கேட்டிருந்தார்கள். இதை வைத்து பார்க்கும்போது ரியல்மி நிறுவனம் மிக விரைவாக Realme’s Q-Series-இல் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்போகிறார்கள் என்ற தெரிகின்றது.