Realme X7, Realme X7 Pro Set to Launch on September 1
Realme X7 Series Launch Date : செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் ரியல்மி நிறுவனம் ரியல்மி X7 & ரியல்மி X7 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி நிறுவனம் வெய்போவில் வெளியிட்ட டீஸர் மூலம் இந்த இரு மொபைல் போன்களில் சிறப்பம்சங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது வெய்போவில் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த இரு மொபைல் போன்களும் 5 ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும் இதில் 120Hz Refresh Rate கூடிய அமோலேட் டிஸ்பிளே, 4,500mAh சக்தி கொண்ட பேட்டரி போன்ற சிறப்பு அம்சங்கள் மொபைல் போன் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைல் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால், உலகளாவிய அறிமுகமா என்பது குறித்த விவரங்கள் இல்லை.