ரியல்மி X7 மற்றும் ரியல்மி X7 ப்ரோ இந்தியாவில் விரைவில் அறிமுகம் !

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி X7 மற்றும் ரியல்மி X7 ப்ரோ  மொபைல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது..

ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் ஷெத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் ரியல்மி X7 மற்றும் ரியல்மி X7 ப்ரோ மொபைலின் பெட்டிகள் இருக்கின்றது. இந்தப் புகைப்படத்தை ரியல்மி X7 ப்ரோ மொபைல் பயன்படுத்தி எடுத்துள்ளார்கள். 

ஏற்கனவே ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்கின்ற தகவல் இதுவரைக்கும் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரியல்மி எக்ஸ் 7, ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை:

கடந்த ஆண்டு சீனாவில் ரியல்மி எக்ஸ் 7 மொபைல் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.19,200 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.25,500 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மொபைல் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.23,500 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.26,700 க்கும் மற்றும் இதன் டாப் எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி மாடலானது ரூ.34,100 க்கும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது

இந்த இரண்டு மொபைல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்போது விலை ஏறத்தாழ ஒரே போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..