ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் OxygenOS 11 அப்டேட் !

ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு OxygenOS 11 அப்டேட் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி  பயனாளர்கள் Android 11 ஐ அடிப்படையாகக் கொண்டு ஆக்சிஜன் ஒஎஸ்11 அப்டேட்  அப்டேட்டை பெறத் துவங்கி உள்ளார்கள். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆக்சிஜன் ஒஎஸ்11 ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுக்கு OxygenOS 11 அப்டேட் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுகிறது.


தற்போது பீட்டா வெர்ஷன்  தான் வெளியிடப்பட்டு இருக்கிறது என்பதால் இதில் ஏராளமான குறைகள் இருக்கலாம்.  மிக விரைவில் ஸ்டேபில் வெர்ஷன் வெளியிடப்படலாம். மேலும் இந்தப் புதிய அப்டேட்டை தங்களுடைய அன்றாடும் பயன்படுத்தும் மொபைலில் இன்ஸ்டால் செய்வது பரிந்துரைக்கப்பட இயலாது.