Realme X50 Pro 5G Price in India February 2020 – Tech News in Tamil
ரியல்மி நிறுவனம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவின் முதல் 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஆனால் இந்தியாவில் தற்போது வரையில் 5G நெட்வொர்க் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் போட்டியில் தற்போது ரியல்மி, Realme X50 Pro 5G என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது.
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பயன்படுத்தியுள்ளார்கள் இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனின் விலையும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Realme X50 Pro 5G ரூ.50,000-க்கு கிடைக்கும், என்று அடையாளம் காண விரும்பாத ஒரு அதிகாரி பி.டி.ஐ-யிடம் கூறினார்.