Realme X3 SuperZoom விரைவில் அறிமுகமாகிறது

Realme X3 SuperZoom Expect Specification

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள்.  இந்த நிறுவனம் ரியல்மி 10 சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக இருந்த, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக இந்த மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்வதை தள்ளி வைத்துள்ளது ரியல்மி. 

இந்நிலையில் தற்போது ரியல்மி எக்ஸ் தொடரில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை Realme X3 SuperZoom என்கின்ற பெயரில் லாக்டவுன் முடிந்த பிறகு அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையானது, ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஸூம் ஆனது ஸ்னாப்டிராகன் 855+  சிப்செட்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் பெயரை வைத்துப் பார்க்கும்போது. இந்த ஸ்மார்ட்போனில் 20X or more zoom capabilities cameras இருக்கும் என்று தோன்றுகிறது.