Realme Narzo 20 Series முதல் விற்பனையில் சாதனை

Realme Narzo 20 Series முதல் விற்பனையில் ரியல்மி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ரியல்மி நிறுவனம் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்தியாவில் Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த சீரிஸில் ரியல்மி நிறுவனம் Realme Narzo 20 Pro, Realme Narzo 20  மற்றும் Realme Narzo 20A என்கின்ற மூன்று மொபைலை அறிமுகம் செய்து வந்தார்கள்.

இந்த மூன்று மொபைல் போனின் முதல் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளம் மற்றும் Realme இணையதளம் மூலமாக தற்போது நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த முதல் விற்பனையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Realme Narzo 20 Pro மொபைல்  விற்பனையாகியுள்ளது.

Realme Narzo 20 மொபைல் பொருத்தவரைக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று விற்பனைக்கு வந்த Realme Narzo 20A மொபைல் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொபைல் விற்பனை ஆகியுள்ளது. இந்தத் தகவலை ரியல்மி நிறுவனத்தின் சிஇஓ மாதவ் சேத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.