கூகுள் நிறுவனத்தின் கூகுள் மீட் அப்ளிகேஷனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Google Meet அப்ளிகேஷனை பெரும்பாலான மக்கள் தற்போது பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த செயலி மூலமாக மீட்டிங் நடத்தும்போது பின்னணியில் ஏற்படும் இரைச்சல் மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது. தற்போது கூகுள் நிறுவனம் இதற்கு தீர்வு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிற்குமான கூகுள் மீட்டில், நாய்ஸ் கேன்சலேஷன் எனும் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இதன் மூலமாக மீட்டிங்கின் போது பின்னணியில் ஏற்படும் இரைச்சலை ரத்துசெய்து அனைவருக்கும் தெளிவான அழைப்புகளை வழங்குகிறது.