ரியல்மி நிறுவனம் இந்தியாவில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் Realme Narzo 20 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிட துவங்கி இருக்கிறது.
நார்சோ 20 ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டு உள்ளது. முன்னதாக ரியல்மி எக்ஸ்50 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 அப்டேட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : Realme Narzo 20 – Full Specifications
புதிய அப்டேட் Realme Narzo 20 மொபைலுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்க சில நாட்கள் ஆகலாம்.