மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன் பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன் பிளஸ் நிறுவனத்தின் OnePlus 9 Series ஸ்பார்க் போன்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த OnePlus 9 Series ஸ்மார்ட்போன் தொடரில் வழக்கமான ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் மலிவு விலையில் ஒன்பிளஸ் 9 இ ஆகிய மூன்று மாடல்கள் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது,
ஒன்பிளஸ் 9 தொடரில் கேமரா அமைப்பை மாற்றியமைக்க கேமரா உற்பத்தியாளரான ஹேசில்பிளாடு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஒன் பிளஸ் தெரிவித்துள்ளது.
தலைசிறந்த ஹார்டுவேர், சிறப்பான வடிவமைப்பு, சிறப்பான கேமரா மற்றும் புகைப்பட துறையில் ஹேசில்பிளாடு பிராண்டின் நிபுணத்துவம் கொண்டு ஒன்பிளஸ் 9 சீரிஸ் இதுவரை வெளியானதில் பிரீமியம், பிளாக்ஷிப் கேமரா கொண்டிருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்து இருக்கிறார்.
It all begins with a simple thought. Discover the #OnePlus9Series, co-developed with @Hasselblad, on March 23.
— OnePlus (@oneplus) March 8, 2021