Realme C15 to Go on Its First Sale in India Today via Flipkart, Realme.com
Realme C15 to Go on Its First Sale in India Today via Flipkart, Realme.com : கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் Realme C15 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் இன்று(ஆகஸ்ட் 27) நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் விற்பனைக்கு வருகின்றது.
ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி, 6.55 அங்குல டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி35 பிராசஸர் பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி மற்றும் 2 எம்.பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.
Realme C15 – Price in India
Realme C15 மொபைல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.