Realme 8 5G வெளியீடு தேதி அறிவிப்பு !

ரியல்மி நிறுவனத்தின் Realme 8 5G மொபைலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதன் முழு விபரங்களை பற்றி பார்க்கலாம்..

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில்தான் Realme 8 மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது 4G மாடல் தான் அறிமுகம் செய்யப்பட்டது. Realme 8 அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனின் 5G மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி நிறுவனம் அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி Realme 8 5G மொபைல் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மொபைலில் இந்திய சந்தையிலும் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.