ரியல்மி 8 5G இந்தியாவில் அறிமுகம் !

ரியல்மி நிறுவனம் ரூ. 14,999 விலையில் ரியல்மி 8 5G என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.  இதன் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

ரியல்மி சமீபத்தில்தான் ரியல்மி 8 சிரீஸ் மொபைல்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள் அதில் ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஆகிய இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்தார்கள் இந்த இரண்டு மொபைல்களும் 4ஜி வசதியுடன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினமே  ரியல்மி 8 5ஜி மாடலை மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி அறிவித்திருந்தது அதன்படி இந்த மொபைல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 5G மொபைல் போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த ஸ்மார்ட்போனை ரியல்மி இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது என்று யூகிக்க முடிகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 8 5G இந்தியாவில் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது ?

ரியல்மி 8 5G மொபைல் இந்தியாவில் ஏப்ரல் 28-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி 8 5G ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
4GB128GBRs. 14,999Flipkart
8GB128GBRs. 16,999Flipkart

Also Read : Realme 8 5G – Full phone specifications