குறைவான விலையில் 5G மொபைல் ! ஒப்போ A53s 5G இந்தியாவில் அறிமுகம்

ஒப்போ நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் ஒப்போ A53s 5G என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

பட்ஜெட் விலையில் ஏற்கனவே ரெட்மி மற்றும் ரியல்மி  நிறுவனங்கள் அதிக ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றார்கள் இந்த ஸ்மார்ட் போனுக்கு போட்டியாக ஒப்போ நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒப்போ A53s 5G என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கலர் ஒஎஸ் 11.1 , 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. மேலும் முன் பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ A53s 5G ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
6GB128GBRs. 14,990Flipkart
8GB128GBRs. 16,990Flipkart

Also Read : Oppo A53s 5G – Full phone specifications