இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு : 14 வயதுசிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

Rajasthan Teen Hangs Self, Was Playing Mobile Game Till 3 AM

இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டை விளையாடிய 14 வயதுசிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின், கோட்டா என்ற இடத்தில் உள்ள காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அதிகாலை தனது படுக்கையறையில் வென்டிலேட்டரின் கிரில்லில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக ரயில்வே காலனி காவல் நிலைய பொறுப்பாளர் ஹன்ஸ்ராஜ் மீனா தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தனது மொபைல் போனில் பப்ஜி விளையாட்டை டவுன்லோட் செய்து இருக்கிறார். அதிலிருந்து அவர் மூன்று நாட்களாக நீண்ட நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிதாக தெரிகிறது.

14 வயது சிறுவனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்று காவல்துறை தனது விசாரணையைத் துவங்கியுள்ளது. இதுகுறித்து தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.