குறைந்த விலையில் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 இந்தியாவில் அறிமுகம்.!

Lenovo IdeaPad Slim 3 starting at Rs 26,990 launched in India

உலகளாவிய கணினி உற்பத்தி சந்தையின் முன்னணி நிறுவனமான லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 என அழைக்கப்படும் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஐடியாபேட் ஸ்லிம் 3 இல் 10 வது ஜெனரல் இன்டெல் கோர் செயலிகள், SSD  மற்றும் எச்டிடி விருப்பத்துடன் கலப்பின சேமிப்பு, வைஃபை 6 மற்றும் இரண்டு யூ.எஸ்.பி 3.1 போர்ட்கள் ஆகியவை விரைவான தரவு பரிமாற்றத்தை செயல்படுத்துகின்றன.


இந்த சாதனம் அமேசான் இந்தியா, லெனோவா வலைத்தளம் மற்றும் அனைத்து லெனோவா பிரத்தியேக கடைகளிலும் கிடைக்கும். லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 மாடல் ஆனது ரூ.26,990 மற்றும் ரூ.40,990-விலையில் விற்பனைக்கு வந்துள்ளது..