Food delivery in India via drones?

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் ஹோட்டல்களுக்கு சென்று உணவு உண்பதை மக்கள் தவிர்த்து வருகிறார்கள். தற்போது பெரும்பாலான மக்கள் ஜொமாட்டோ, ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்து உணவை வாங்கி வருகின்றார்கள்.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் டெலிவரி செய்ய ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ கஷ்டப்பட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் டிரோன் மூலம் பொருட்களை டெலிவரி செய்வதற்கான சோதனையை துவங்க ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.