இந்தியாவில் ஒரே IMEI எண்ணில் 13,000 போன்கள்!

Over 13,000 mobile phones running on same IMEI number in India

உத்தரபிரதேசத்தில் உள்ள காவல்துறையினர் இந்தியாவில் 13,000 க்கும் மேற்பட்ட கைபேசிகள் ஒரே IMEI எண்ணில் இயங்குவதைக் கண்டறிந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரின் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் புதிதாக VIVO செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அது சரியாக வேலை இல்லை என்பதற்காக பழுது பார்ப்பதற்காக கடையில் கொடுத்துள்ளார் பின்பு பழுதுபார்க்கப்பட்டாலும் புதிய தொலைபேசி சரியாக வேலை செய்யாததால், காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினரிடம் அந்த போனைக் கொடுத்துள்ளார். 

பின்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் , அந்த  மொபைல் போனில் உள்ள ஐஎம்இஐ எண்ணில் சுமார் 13000 மொபைல் போன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.