போக்கோ எக்ஸ்3 இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகின்றது

போக்கோ எக்ஸ்3 இந்திய விலை ? Poco X3 To Launch India On September 22

போக்கோ நிறுவனம் சமீபத்தில்தான் போக்கோ M2 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்நிலையில் போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை தற்போது அறிவித்துள்ளார்கள்.

போக்கோ எக்ஸ்3 மொபைல் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தரப்பில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

ஒரு லீக்ஸ் தகவலின்படி, இந்தியாவில் போக்கோ எக்ஸ் 3 மாடலானது ரூ.18,499 அல்லது ரூ.18,999 க்கு இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.