போக்கோ எக்ஸ்3 மொபைலின் விலை குறைந்தது !

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 மொபைலின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3  மொபைல் இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த மொபைலுக்கு தற்போது 2000 முதல் 3000 வரை விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி துவங்கி ஜனவரி 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் போக்கோ எக்ஸ்3 மொபைலுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது..

மாடல்பழைய விலைபுதிய விலைவாங்க
6 GB | 64 GBRs. 16,999Rs. 14,999FlipKart
6 GB | 128 GBRs. 17,999Rs. 15,999FlipKart
8 GB | 128 GBRs. 19,999Rs. 17,999FlipKart