ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ 12 மொபைலுக்கு இரண்டாவது முறையாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ 12 மொபைல் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ 12 மொபைலுக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைகுறைப்பிற்கு பின், ஒப்போ ஏ 12 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.8,990-லிருந்து ரூ .8,490 ஆகக் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமும் விலைக் குறைப்பைப் பெற்றது, இப்போது அது ரூ.10,990 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ஒப்போ ஏ 12 மொபைல் ரூ.500 என்கிற தள்ளுபடியை பெற்றுள்ளது.