Poco M2 Pro ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றது

Poco M2 Pro Launch Date : Poco M2 Pro launching in India on July 7

போக்கோ நிறுவனம் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி இந்தியாவில் தன்னுடைய Poco M2 Pro என்கின்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள். இந்த அறிவிப்பை போக்கோ இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் வழியாக தெரிவித்துள்ளது.

முன்னதாக போக்கோ கடந்த பிப்ரவரி மாதம் POCO X2 என்கின்ற மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தார்கள். போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்குப் பிறகு, வருகிற ஜூலை 7ஆம் தேதி Poco M2 Pro என்கின்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றார்கள்.

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுகமானது நிறுவனத்தின் சமூக ஊடக தளங்கள் மூலம் குறிப்பிட்ட தேதி மதியம் 12 மணிக்கு நடக்க இருக்கின்றது.