கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கம் !

Paytm app removed from Google Play Store

Paytm செயலியை இந்திய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. விதிமுறைகளை மீறியதால் Google Play ஸ்டோரிலிருந்து Paytm அகற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போது கூகுள் நிறுவனத்தின் சூதாட்டக் கொள்கைகளை  மீறியதால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் Paytm அப்ளிகேஷனை நீக்கி உள்ளார்கள். ஆனால், IOS க்கான Paytm பயன்பாடு ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்ய இன்னும் கிடைக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் விதிகள் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்காது. இதன் காரணமாக தான் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கப்பட்டு இருப்பதாக தெரிகின்றது. 

இதற்கு விளக்கம் அளிக்கும்படி பேடிஎம் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். தற்காலிகமாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.