Paytm app is back on Google Play Store
இந்திய மக்கள் அதிகளவில் பயன்படுத்திவந்த Paytm செயலி நேற்றையதினம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் விதிகள் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்காது. Paytm செயலி சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக இருந்ததால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இதைப் பற்றி கருத்து தெரிவித்த Paytm நிறுவனம் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். தற்காலிகமாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் வரும் என்று கூறினார்கள். அதன்படி Paytm செயலி மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் வந்துவிட்டது.