ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடைய முதல் பிட்னஸ் பேண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்..
ஒன் ப்ளஸ் நிறுவனம் சியோமிக்கு போட்டியாக இந்திய சந்தையில் தன்னுடைய முதல் பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் பேண்ட் விலை ரூ. 2,499. என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது..இது கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது.
மேலும் ஒன் ப்ளஸ் பிட்னஸ் பேண்ட் அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ் பிரத்தியேக ஆஃப்லைன் கடைகள் மற்றும் கூட்டாளர் விற்பனை நிலையங்கள் மூலம் ஜனவரி 13 முதல் விற்பனைக்கு வரும்.
புதிய ஒன்பிளஸ் பேண்ட் மாடலில் 1.1 இன்ச் AMOLED கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, நோட்டிபிகேஷன் வசதி, இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங், ப்ளூடூத் 5, ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங், 110 எம்ஏஹெச் பேட்டரி, 3 பிரத்யேக உடற்பயிற்சி மோட்கள், ஐபி 68 + 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
Model | Price | Buy |
OnePlus Band | Rs. 2,499 | Flipkart |