நோக்கியா நிறுவனத்தின் நோக்கிய c3 மாடல் மொபைலுக்கு இந்தியாவில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விபரங்களை பற்றி பார்க்கலாம்..
Nokia C3 ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது நோர்டிக் ப்ளூ மற்றும் சாண்ட் கலர் விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மாடல் ஆனது ரூ.7,499 க்கும், இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.8,999 க்கும் விற்பனைக்கு வந்தது.
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நோக்கியா சி3 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மாடல் விலை ரூ. 500, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது.