லேண்ட்லைனில் இருந்து செல்போனுக்கு அழைக்க ஜீரோ கட்டாயம்..!

லேண்ட் லைனில் இருந்து செல் போனுக்கு அழைக்கும்போது ‘0’ அழுத்த வேண்டும் என்கின்ற நடைமுறை விரைவில் வர இருக்கின்றது. 

லேண்ட் லைனில் இருந்து செல்போனுக்கு அழைக்கும்போது இதுவரைக்கும் பத்து இலக்க மொபைல் என்னை அழுத்தி தொடர்பு கொண்டு வந்தோம். இதில் தற்போது சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

2021 ஜனவரி  1-ஆம் தேதி முதல் லேண்ட் லைனில் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்பு கொள்ளும்போது பூஜ்யம் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக, தொலைத் தொடர்புத் துறை நவம்பர் 20 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையை  வெளியிட்டுள்ளது.