Google Pay-ல் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணமா? விளக்கம் கொடுத்த கூகுள் பே

Google Pay-ல் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவியது. இதற்கு தற்போது கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது..

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலியை பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். சமீபத்தில் சில செய்தி ஊடகங்களில் இந்தியாவில் Google Pay-ல் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் விதிக்கப் போவதாக தகவல் வெளிவந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள கூகுள் நிறுவனம் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது அமெரிக்காவில் மட்டுமே என்றும், இந்தியாவில் அப்படி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது