20 ரூபாயில் புதிய ரேஷன் கார்டு : ஆன்லைன் மூலம் மாற்று ரேஷன் கார்டு பெருவது எப்படி

Puthiya Ration Card : New ration card apply in tamilnadu

தற்போது தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ‘ஸ்மார்ட் கார்டுகள்’ தொலைந்து போனால் புதிய ‘ஸ்மார்ட் கார்டுகள்’ க்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் திருத்தங்கள் செய்தவர்களுக்கும், தொலைத்தவர்களுக்கும் 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக புதிதாக மெஷின்களும் வாங்கப்பட்டன.

இதன் மூலமாக ரேசன் கார்டுகளை தொலைத்தவர்களும், பெயர், முகவரி போன்றவற்றை திருத்தம் செய்ய விரும்புபவர்களும் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

எப்படி மாற்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்வது :

  • www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • உங்கள் ரேஷன் ஸ்மார்ட்கார்டுக்கு பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு உங்களுடைய செல்போனுக்கு வரும் OTP. நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரிகள் அலுவலகத்திலும் ஒப்புதல் பெற்றதும் கார்டு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
  • புதிய ரேஷன் கார்டு தயாராகிய பிறகு 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.