ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord N100 மொபைலின் விலை மற்றும் பல்வேறு தகவல்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
OnePlus Nord N100 மொபைல் பற்றின பல்வேறு தகவல்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகி வருகிறது. அதன்படி இந்த மொபைல் நவம்பர் 10 ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் புகைப்படம் எடுப்பதற்கு 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா கொடுப்பார்கள் என்று தெரிகின்றது.
ஒன்பிளஸ் நார்டு என்100 மாடலின் விலை 199 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 17,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் 15,000 ரூபாய்க்கு கீழ் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.