ரியல்மி c17 மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ரியல்மி c சீரிஸ் பொருத்தவரைக்கும் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ் அறிமுகம் செய்வார்கள். பண்டிகை காலம் என்பதால் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் மொபைலை மக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றார்கள் சமீபத்தில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரியல்மி 12, ரியல்மி 15 போன்ற மொபைல்களுக்கு ரியல்மி அதிக தள்ளுபடியை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரியல்மி c சீரிஸில் அடுத்த மொபைல் ஆக Realme C17 மொபைல் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்வார்கள் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மொபைல் ரியல்மி ஏற்கனவே பங்களாதேஷில் அறிமுகம் செய்த ரியல்மி C17 மொபைல் மாடல் போன்றே இந்தியாவிலும் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பங்களாதேஷில் இந்த மொபைல் 6GB Ram மாடல் இந்திய மதிப்பில் ரூ.13,900க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை 10,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.