தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ப்ளிப்கார்ட் நிறுவனம் “பிக் தீபாவளி சேல்” விற்பனையை நடத்த உள்ளார்கள் இதன் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிளிப்கார்ட் நிறுவனம் சமீபத்தில்தான் பிக் பில்லியன் டே விற்பனையை நடத்தியது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீண்டும் மற்றொரு சிறப்பு விற்பனையை நடத்த இருக்கிறது.
இந்த விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கி நவம்பர் 4 வரை நடைபெற இருக்கிறது. ப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்கள் 12 மணி நேரம் முன்னதாகவே சிறப்பு விற்பனையில் பங்கேற்க முடியும் என்று பிளிப்கார்ட் தரப்பில் கூறப்படுகின்றது.
சிறப்பு விற்பனையின் போது பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பொருள்களுக்கு அதிக சலுகை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதுதவிர பிக் தீபாவளி சேல் விற்பனையில் வட்டியில்லா மாத தவணை வசதி, கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது