ரூ.1,999க்கு Lava Pulse 1 இந்தியாவில் அறிமுகம்

லாவா நிறுவனம் இந்தியாவில் வெறும் ரூ.1,999க்கு Lava Pulse 1 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள்.

லாவா நிறுவனம் Lava Pulse 1 என்கின்ற பீச்சர் போன் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பீச்சர் போனின் விலை ரூ.1999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மொபைல் ரோஸ் கோல்ட் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 1800 mAh பேட்டரி,  வயர்லெஸ் எஃப்எம் மற்றும் டூயல் சிம் ஆதரவு போன்ற போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

Lava Pulse 1 மொபைலில் விலை ரூ.1999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் லாவா போன் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கிறது.