புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் ? நெட்ஃப்ளிக்ஸ் மகிழ்ச்சி

கொரோனா காரணமாக உலகமெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓடிடி தளங்களில் திரைப்படங்கள், தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் வரை, Netflix-இல் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஆனால், கொரோனா பரவல் தொடக்கத்தின்போது அதிக அளவிலான சந்தாதாரர்கள் Netflix பயன்படுத்த தொடங்கினார்கள் அந்த எண்ணிக்கை தற்போது சற்று குறைந்து வருவதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது.