Sbi Balance Check Number : எஸ்பிஐ பேலன்ஸ் என்கொயரி நம்பர் !
SBI Balance Enquiry Toll Free Number
Check sbi balance through sms
இந்தியாவில் மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பொதுத்துறை வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகும். இந்த வங்கியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. குறிப்பாக நமது சேமிப்புக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது, என்பதை கண்டறிவது மிகவும் சுலபம்.
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு வங்கிய அலுவலகத்திற்கோ ஏடிஎம் மையத்திற்கோ செல்ல தேவை இல்லை உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் மூலமாக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
உங்களுடைய வங்கி கணக்கில் பதிவு செய்து வைத்திருக்கும் மொபைல் எண்ணில் இருந்து 09223766666 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் உங்கள் வங்கியில் இருக்கும் இருப்புத் தொகை பற்றிய தகவல் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வந்துவிடும்.
அல்லது ‘BAL’ என டைப் செய்து 09223766666 என்கிற எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்புதல் மூலமாகவும் நீங்கள் இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
நீங்க மிஸ்டுகால் கொடுக்கும்போது உங்கள் மொபைல் எண் sbi quick facility-ல் ரெஜிஸ்டர் செய்யப்படவில்லை என்று உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால். ‘REG உங்களுடைய வங்கி அக்கவுண்ட் நம்பர்’ டைப் செய்து 09223488888 என்கிற எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பி உங்களுடைய என்னை ரெஜிஸ்டர் செய்தபின் மிஸ்டு கால் கொடுத்து நீங்கள் உங்களுடைய இருப்புத் தொகையை சரி பார்த்துக் கொள்ளலாம்.