கொரோனா வைரஸ் காரணமாக MWC இந்தஆண்டு கைவிடப்பட்டது : MWC 2020 is Cancelled

Mobile World Congress 2020 canceled over coronavirus health concerns

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் கைவிடப்பட்டுள்ளது.

வருடம் தோறும் புதிதாக உருவாக்கப்படும் மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்து வைப்பதற்காக மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் எனும் நிகழ்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வில் பல முக்கிய நிறுவனங்கள் தாங்கள் கொண்டு வர இருக்கும் புதிய தொழில்நுட்பம் அல்லது புதிய சாதனங்களை காட்சி படுத்துவார்கள். தற்போது சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் இந்த நிகழ்வை புறக்கணித்தார்கள்.

இதன் காரணமாக இந்த ஆண்டு MWC நிகழ்வை கைவிடப்படுவதாக GSM Association (GSMA) கூறியுள்ளார்கள்.மேலும் அடுத்த மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பார்ஸிலோனாவிலேயே இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.