பொறுமையை இழந்த BSNL : Bsnl Warning Commercial Calls and Commercial SMS via Mobile or Landline Connection

BSNL Warns Users Not to Make Any Commercial Calls and Commercial SMS

மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய தலைவலியாக இருப்பது வியாபார நோக்கத்துக்காக வரும் சில அழைப்புகள் தான், தற்போது இதை கட்டுப்படுத்த அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வணிகம் சார்ந்த அழைப்புகளையோ அல்லது வணிகம் சார்ந்த எஸ்.எம்.எஸ்களையோ செய்ய வேண்டாம் என்று BSNL எச்சரித்துள்ளது.

இதுபோன்று தொடர்ந்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தி வந்தால் நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட மொபைல் எண் அல்லது லேண்ட்லைன் இணைப்பானது பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.