ஜியோ 5ஜி இந்தியாவில் 2021 இறுதிக்குள் வரும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி 2021 ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்தியாவில் 5 ஜி சேவையை ஜியோ தொடங்க இருப்பதாக கூறினார். ஜியோ வழங்கும் 5 ஜி சேவை அரசாங்கத்தின் ஆத்மனிர்பர் ஜியோ கொள்கைக்கு சான்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்றும் 2ஜி சேவைகளை தான் பயன்படுத்தி வருகிறார்கள் இவர்களுக்கு தேவை குறைந்த விலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள். இதன் வழியாக அவர்களும் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியா பண பரிமாற்றம் செய்வது உட்பட பல வகையாக டிஜிட்டல் பொருளாதாரத்தில் தீவிரமாக பங்கேற்கலாம்.
இதற்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையிலான ஆன்ட்ராய்ட் செல்போனை ஜியோ உருவாக்கி வருவதாகவும், அந்த மொபைல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று அம்பானி கூறினார்.
2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் 5ஜி புரட்சி உண்டாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.