ஆப்பிள் நிறுவனம் ரூ.60,000 ரூபாய்க்கு புதிய AirPods Max ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளார்கள்.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிய ஐபோன், மேக்புக், ஐபேட் என எப்போதையும் விட அதிக சாதனங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.அந்த வரிசையில் தற்போது புதிதாக ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
இது வருகிற டிசம்பர் 15ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது இந்தியாவில் இதன் விலை ரூ.60,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
AirPods Max ஒவர்-இயர் டிசைன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒரு உலோக ஹெட் பேண்டுடன் ஓவர்-தி-ஹெட் வயர்லெஸ் டிசைனுடன் வருகிறது.இந்த டிசைன் தலையில் எந்த ஒரு அழுத்தத்தையும் தராது. அனைத்து தரப்பினருக்கும் சௌகரியமாக இருக்கும் இந்த ஹெட்போன்ஸ் எனச் சொல்லியிருக்கிறது ஆப்பிள்.
இதில் ஆப்பிள் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட 40எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் ஹெச்1 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த 10-core சிப் விநாடிக்கு 900 கோடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவல்லது. இது வரும் ஒலியை இன்னும் மேம்படுத்தி உங்களுக்குக் கொடுக்குமாம்.
மேலும் ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் வசதி தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இது 5.1, 7.1 மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற தரவுகளை துல்லியமாக அதிக தரத்தில் அனுபவிக்க வழி செய்கிறது.
பேட்டரியை பொறுத்தவரையில் 20 மணிநேரம் பாடல்கள் கேட்க முடியும், இதை ஆப்பிளின் ‘Lightning’ போர்ட் வழிதான் சார்ஜ் செய்ய முடியும். USB-C கொடுக்கப்படவில்லை. Space grey, silver, sky blue, green, pink ஆகிய ஐந்து நிறங்களில் இந்த ஹெட்போன் விற்பனைக்கு வர இருக்கிறது.!