ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் பொருட்கள் வாங்கலாம் : மத்திய அரசு அனுமதி

Mobiles, TVs to Be Available on E-Commerce Platforms From April 20

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் வருகிற மே மூன்றாம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதேபோல் ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து மேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 20 முதல் மின்னணு பொருள்களின் விற்பனை  ஆரம்பிக்க இருக்கின்றது.

அரசு இவ்வாறு அனுமதி கொடுத்தாலும், உள்ளூரில் இருக்கும் அதிகாரிகளின் அனுமதியோடு வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி “இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தேவையான அனுமதிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.