Micromax In Series நவம்பர் 3-இல் இந்தியாவில் அறிமுகம்!

சீன மொபைல்களுக்கு போட்டியாக மைக்ரோமேக்ஸ் தன்னுடைய  புதிய இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை  நவம்பர் 3ஆம்  தேதி அறிமுகம் செய்கின்றது.

பட்ஜெட் விலையில் மொபைல்களை அறிமுகம் செய்ய in என்கின்ற துணை பிராண்டு ஒன்றை மைக்ரோமேக்ஸ் உருவாக்கினார்கள். இந்த புதிய ‘இன்’ பிராண்டு மூலமாக நவம்பர் 3ஆம் தேதி இந்தியாவில் Micromax In Series மொபைல்களை அறிமுகம் செய்கிறார்கள்.

தீபாவளி வருவதை முன்னிட்டு இந்த மொபைல் இந்திய சந்தையில் வருவதால் மொபைலுக்கு மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் Series-ல் Micromax IN 1, Micromax IN 1a என்கின்ற இரு மொபைல்களை அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல்களின் விலை 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது

வரவிருக்கும் இந்த புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை பற்றிய போதுமான விவரங்கள் இல்லை ,  என்றாலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் தான் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதியாக கூறலாம். இந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்பட்டது என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது.