LG மொபைலுக்கு ரூ.40,000 விலை குறைப்பு !

LG நிறுவனத்தின் LG Wing மொபைல் ரூ.29,999 க்கு பிளிப்கார்ட்டில் நடக்கும் Flagship Fest விற்பனையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிளிப்கார்ட்டில் நடக்கும் Flagship Fest விற்பனையில் LG நிறுவனத்தின் LG Wing மொபைலுக்கு ரூ. 40,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஏப்ரல் 12ம் தேதி துவங்கி ஏப்ரல் 17 வரைக்கும் நடைபெறுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் ரூ .69,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. LG Wing மொபைலின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ40,000 விலை குறைந்து ரூ.29,999 க்கு  பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்றாலும் இந்த மொபைலை வாடிக்கையாளர்களால் தற்போது வாங்க முடியவில்லை..

இந்த கட்டுரையை எழுதும்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் கையிருப்பில் இல்லை ‘Notify Me’ என்றுதான் இருக்கிறது.

RamROMPriceBuy
8 GB128 GBRs. 29,999Flipkart