ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே மிகக் குறைவான விலைக்கு மொபைல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி 500 ரூபாய்க்கும் கீழே ஒரு மொபைல் போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய ஜியோபோன் 4G இணைப்பு மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளுக்கான அம்சங்களுடன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த மொபைல் போனின் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.