மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பிராட்பேண்டின் சில திட்டங்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இந்தக் கட்டண உயர்வு அனைத்து வட்டங்களிலும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் அதிக சலுகைகளை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த கட்டண உயர்வு ஒரு சில திட்டங்களுக்கு மட்டும் 30 ரூபாய் வரைக்கும் கட்டண உயர்வை பெற்றுள்ளது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் 2ஜிபி CUL மாதாந்திர பிராட்பேண்ட் பிளான் 349 ரூபாயிலிருந்து 369 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.