சீன நிறுவனத்திற்கு போட்டியாக ஜியோ நிறுவனத்தின் JIOMEET இந்தியாவில் அறிமுகம்

Reliance Jio officially launch jio meet : Best indian video conferencing app ?

ஜியோ நிறுவனம் ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் செயலி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி சீன நிறுவனத்தின் ஜூம் ஆப்பிற்கு கடுமையான போட்டியைக் கொடுப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோமீட் நேரடி அழைப்புகள் (1: 1 காலிங் ) மற்றும் ஒரே சமயத்தில் 100 பேருடன் வீடியோ கால் பேச முடியும், இடைவிடாது 24 மணி நேரத்திற்கு உரையாடல்களை நடத்த முடியும். 


ஜியோமீட் செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ், மேக் ஒஎஸ் மற்றும் இணையம் என பல்வேறு தளங்களில் கிடைக்கிறது. முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் ஜியோ மீட் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.